செய்திகள்

வரதட்சணைக்காக மருமகளை விரட்டிய சப்-இன்ஸ்பெக்டர்- வேதனையில் வி‌ஷம் குடித்த பெண்

Published On 2019-02-11 10:51 GMT   |   Update On 2019-02-11 10:51 GMT
திண்டுக்கல் அருகே வரதட்சணைக்காக மருமகளை வீட்டை விட்டு சப்-இன்ஸ்பெக்டர் விரட்டியதால் மனமுடைந்து அவர் வி‌ஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்:

வரதட்சணைக்காக மருமகளை வீட்டை விட்டு சப்-இன்ஸ்பெக்டர் விரட்டியதால் மனமுடைந்து வி‌ஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ரமேஷ் என்பவருக்கும் கன்னிவாடி அருகே உள்ள குரும்பபட்டியைச் சேர்ந்த சுகந்தி (வயது 21) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 8 மாத கைக்குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பிறகு ரமேஷ் வேலை இல்லாமல் இருந்ததால் அவர் தொழில் தொடங்க ரூ.5 லட்சம் பணம் வாங்கி வருமாறு மாமனார் சுப்பிரமணி அவரை கொடுமைபடுத்தி வந்துள்ளார்.

இதனால் குழந்தை பிறந்தவுடன் அவரை வீட்டை விட்டு விரட்டி விட்டனர். மேலும் சுகந்தி வேறு ஒரு வாலிபருடன் பழகுவதாகவும் குற்றம் சாட்டினார். சம்பவத்தன்று சுகந்தி வீட்டுக்கு சென்ற சுப்பிரமணி மற்றும் ரமேஷ் வரதட்சணை ஏன் வாங்கி வரவில்லை? என சத்தம் போட்டுள்ளனர்.

இதனால் மனமுடைந்த சுகந்தி வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வரதட்சணைக்காக போலீஸ் அதிகாரியே மருமகளை வீட்டை விட்டு விரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News