செய்திகள்

மதுரையில் ராணுவ வீரர் தற்கொலை- விடுதியில் தூக்கில் தொங்கினார்

Published On 2019-02-10 19:08 IST   |   Update On 2019-02-10 19:08:00 IST
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே விடுதி அறையில் தூக்குப்போட்டு ராணுவ வீரர் தற்கொலை செய்தார்.

மதுரை:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள எம்.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 28). ராணுவ வீரர். ஜம்முவில் பணியாற்றி வரும் இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்த நிலையில் சுந்தர மூர்த்தி காசநோயால் அவதிப்பட்டு வந்தார். எனவே வேலையை விட்டு வந்துவிடலாமா? என யோசித்துள்ளார்.

சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்த அவர், குடும்பத்தினருடன் பேசியுள்ளார். இந்த நிலையில் மதுரை டவுன்ஹால் பகுதியில் உள்ள விடுதியில் அறை எடுத்து சுந்தரமூர்த்தி தங்கினார்.

மறுநாள் காலையில் அவரது அறைக்கதவு நீண்ட நேரமாக திறக்கப் படவில்லை. இது தொடர்பாக திடீர் நகர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது சுந்தரமூர்த்தி தூக்கில் பிணமாக தொங்குவது தெரியவந்தது.

அவர் ஏன் தற்கொலை செய்தார் என்பது தெரிய வில்லை. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News