செய்திகள்

பலமான கூட்டணி அமைத்து பா.ஜனதா தேர்தலை சந்திக்கும்- வானதி சீனிவாசன் பேட்டி

Published On 2019-02-08 15:19 IST   |   Update On 2019-02-08 15:19:00 IST
வருகிற பாராளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைத்து பா.ஜனதா தேர்தலை சந்திக்கும் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார். #vanathisrinivasan #bjp #parliamentelection

திருப்பூர்:

பிரதமர் மோடி நாளை மறுநாள் திருப்பூர் வருகிறார். திருப்பூர் பெருமாநல்லூரில் நடைபெறும் பாரதீய ஜனதா பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.

இது தொடர்பான ஆலோசனை கூட்டம் பொதுக்கூட்ட மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் பாரதீய ஜனதா மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது-

திருப்பூர் பெருமா நல்லூரில் நடைபெறும் பொதுக்கூட்டம் மேற்கு மண்டல பொதுக்கூட்டமாக அமையும். 8 பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் கூட்டமாகவும் இருக்கும். 10-ந் தேதி மதியம் 2 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது.

இதில் 3 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா பலமான கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரிடம் பிரதமர் மோடி வரும் போது கருப்பு கொடி காட்டப்போவதாக அறித்துள்ளார்களே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.


அதற்கு வானதி சீனிவாசன் பதில் அளிக்கும் போது, தாங்களும் இங்கே இருக்கிறோம் என்பதை அடையாளம் காட்டுவதற்காக தான் கருப்பு கொடி காட்டுவதாக அறிவித்து உள்ளனர்.

என்னதான் கருப்பு கொடி காட்டினாலும் பிரதமர் மோடி தமிழகத்திற்கு அதிக திட்டங்களை தந்து கொண்டிருக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வழங்கி கொண்டிருக்கிறார் என்றார். #vanathisrinivasan #bjp #parliamentelection

Tags:    

Similar News