செய்திகள்

2019-20ல் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை ரூ.44,176 கோடி- பட்ஜெட்டில் தகவல்

Published On 2019-02-08 05:06 GMT   |   Update On 2019-02-08 09:01 GMT
2019-20ம் நிதியாண்டில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை ரூ.44,176 கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
சென்னை:

தமிழகத்தில் 2019-2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை (நிதிநிலை அறிக்கை) தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று கூடியது. காலை 10 மணிக்கு நிதித்துறை அமைச்சரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-



2019-20ம் நிதியாண்டில் தமிழக அரசின் வரி வருவாய் ரூ.1,97,721 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் நிதி பற்றாக்குறை ரூ.44,176 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது. நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.284 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று வீடுகள் கட்டித் தரப்படும். இதற்காக பட்ஜெட்டில் ரூ.1700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.  #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
Tags:    

Similar News