செய்திகள்

சென்னை மெட்ரோ ரெயிலில் கட்டணம் குறைப்பு

Published On 2019-02-08 04:03 GMT   |   Update On 2019-02-08 04:05 GMT
சென்னை மெட்ரோ ரெயிலில் கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது. விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டைக்கு ரூ.60 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #Metrotrain
சென்னை:

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் வழித்தடத்திலும், சென்டிரல் முதல் பரங்கிமலை இடையே 22 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நடந்து வந்தன. சென்னையில் 45 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மெட்ரோ ரெயில் அமைக்கும் திட்டத்தில் 35 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பணிகளை முடித்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

மீதம் உள்ள தேனாம்பேட்டை (டி.எம்.எஸ்.) - வண்ணாரப்பேட்டை (வழி சென்டிரல்) இடையே உள்ள 10 கிலோ மீட்டர் தூர மெட்ரோ ரெயில் சேவையை நாளை மறுநாள் (10-ந்தேதி) திருப்பூரில் இருந்து பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

மெட்ரோ ரெயிலில் தினசரி 55 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர். இதில் ரூ.10 முதல் ரூ.70 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் அதிகமாக இருப்பதால் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.



இந்தநிலையில் தற்போது வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். புதிய வழித்தடத்திலும் ரெயில்கள் இயங்க இருப்பதால் கட்டணத்தை சற்று குறைக்க அதிகாரிகள் மத்தியில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதற்கான அதிகாரப்பூர்வ பட்டியல் நேற்று இரவு வெளியானது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விமான நிலையத்தில் இருந்து மீனம்பாக்கம் ரூ.10, நங்கநல்லூர் ரோடு ரூ.20, ஆலந்தூர் ரூ.30, கிண்டி, சின்னமலை சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை ரூ.40, டி.எம்.எஸ். ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம், சென்னை சென்டிரல் ரூ.50, ஐகோர்ட்டு, மண்ணடி வண்ணாரப்பேட்டை ரூ.60, ஈக்காட்டுதாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம் ரூ.40, கோயம்பேடு பஸ் நிலையம், கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு ரூ.50, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா, எழும்பூர் ரூ.60 என கட்டணம் வசூலிக்கப்படும்.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து விமானநிலையம் ரூ.50, மீனம்பாக்கம், நங்கநல்லூர் ரோடு, ஆலந்தூர், கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை ரூ.40, நந்தனம், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம் ரூ.40, சென்னை சென்டிரல் ரூ.40, ஐகோர்ட்டு, மண்ணடி வண்ணாரப்பேட்டை ரூ.50, ஈக்காட்டுதாங்கல் ரூ.40, அசோக்நகர் ரூ.30, வடபழனி ரூ.20, அரும்பாக்கம் ரூ.10, கோயம்பேடு ரூ.10, திருமங்கலம், அண்ணாநகர் டவர் ரூ.20, அண்ணாநகர் கிழக்கு ரூ.30, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா, எழும்பூர், பரங்கிமலை ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

எழும்பூரில் இருந்து விமானநிலையம் ரூ.50, மீனம்பாக்கம் ரூ.60, நங்கநல்லூர் ரோடு ரூ.50, ஆலந்தூர், கிண்டி ரூ.50, சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., ரூ.40, ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., ரூ.30, அரசினர் தோட்டம் ரூ.20, சென்னை சென்டிரல் ரூ.10, ஐகோர்ட்டு, மண்ணடி ரூ.20, வண்ணாரப்பேட்டை ரூ.30, ஈக்காட்டுதாங்கல், அசோக்நகர் ரூ.50, வடபழனி ரூ.40, அரும்பாக்கம் ரூ.40, கோயம்பேடு, திருமங்கலம் ரூ.40, அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு ரூ.30, ஷெனாய் நகர் ரூ.20, பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம் ரூ.10, பரங்கிமலை ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும்.

சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து விமானநிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் ரோடு, ஆலந்தூர் ரூ.50, கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை ரூ.40, டி.எம்.எஸ்., ரூ.30, ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., ரூ.20, அரசினர் தோட்டம் ரூ.10, ஐகோர்ட்டு ரூ.10, மண்ணடி, வண்ணாரப்பேட்டை ரூ.20, ஈக்காட்டுதாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம் ரூ.50, கோயம்பேடு பஸ் நிலையம் ரூ.40, திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு ரூ.40, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி ரூ.30, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ரூ.20, எழும்பூர் 10, பரங்கிமலை ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #Metrotrain
Tags:    

Similar News