செய்திகள்

ஜாக்டோ ஜியோவுக்கு ஆதரவு - தஞ்சையில் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

Published On 2019-01-30 12:28 GMT   |   Update On 2019-01-30 12:28 GMT
தஞ்சையில் ஜாக்டோ ஜியோவுக்கு ஆதரவாக கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #Jactogeo
தஞ்சாவூர்:

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22-ந் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜாக்டோ ஜியோவுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கல்லூரிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.

இதையடுத்து கல்லூரி முன்பு திரண்டு நின்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் அரவிந்த்சாமி, கிளை செயலாளர் சோபியா ஆகியோர் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் அருண்குமார் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தின்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 500 மாணவிகள் கலந்து கொண்டனர். #Jactogeo
Tags:    

Similar News