செய்திகள்

கோவையில் மறியல் - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50 பேர் கைது

Published On 2019-01-28 12:07 GMT   |   Update On 2019-01-28 12:07 GMT
கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:

கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

அரசு துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் நடைபெற்றது. போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மாவட்ட செயலாளர் கனகராஜ் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்திய மாணவர் சங்கம் சார்பில் வடவள்ளி நவாவூர் பிரிவில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழகம் ஆர். 2017 என்ற கல்வி முறையை கொண்டு வந்து மாணவர்களை பாதிப்படைய செய்து உள்ளது. மேலும் பல என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., எம்.இ., எம்.பி.ஏ., படித்த ஆசிரியர்களை வைத்தே பாடம் நடத்தி வருகிறார்கள்.

இந்த மாதிரியான சூழ்நிலையில் ஆர் 2017 தேர்வு முறையை நடைமுறைப்படுத்தினால் கிராமபுறத்தில் உள்ள மாணவர்கள் பெரிதும் பாதிப்பு அடைவார்கள். தேர்வில் புதியதாக அமல்படுத்திய முறைகளை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் அவர்கள் ஊர்வலமாக வந்து டீன் (பொறுப்பு) விக்ரமனிடம் மனு அளித்தனர். #tamilnews
Tags:    

Similar News