செய்திகள்

மதுரையில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க பட்டதாரிகள் ஆர்வம்

Published On 2019-01-28 13:16 IST   |   Update On 2019-01-28 13:16:00 IST
மதுரை தல்லாகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று பெண்கள் உள்பட ஏராளமான பட்டதாரிகள் தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஆர்வமாக விண்ணப்பித்துள்ளனர். #JactoGeo #Temporaryteacher
மதுரை:

பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த ஒரு வாரமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்தால் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மார்ச், ஏப்ரல் மாதங்களில் பள்ளி இறுதி தேர்வு நடைபெற உள்ளதால் மாணவ-மாணவிகளின் கல்விக்கு தமிழக அரசு மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது.

அதன்படி மாநிலம் முழுவதும் தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை தல்லாகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று பெண்கள் உள்பட ஏராளமான பட்டதாரிகள் தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஆர்வமாக விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுத்தனர். இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் அவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். #JactoGeo #Temporaryteacher

Tags:    

Similar News