செய்திகள்

நன்னிலம் அருகே போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

Published On 2019-01-26 16:43 IST   |   Update On 2019-01-26 16:43:00 IST
நன்னிலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவுப்படி நேற்று இரவு மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சன்னாநல்லூர் பகுதியில் நன்னிலம் சப்-இன்ஸ் பெக்டர் சுகன்யா, தலைமை ஏட்டு மணிகண்டன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் நாகை மாவட்டம் திருப்புகலூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 38) என்பவர் வேகமாக வந்து கொண்டிருந்தார். அவரை போலீசார் வழி மறித்து நிறுத்தி வாகனத்துக்குரிய ஆவணங்களை காண்பிக்குமாறு கூறினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா மற்றும் ஏட்டு மணிகண்டனை திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து சப்-இனஸ்பெக்டர் சுகன்யா நன்னிலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்குப்பதிவு செய்து போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாலசுப்பிரமணியனை கைது செய்தார்.

Tags:    

Similar News