செய்திகள்

காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தயார் - தமிழக தேர்தல் அதிகாரி

Published On 2019-01-25 08:07 GMT   |   Update On 2019-01-25 09:55 GMT
காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் எப்போது இடைத்தேர்தல் நடத்த கூறினாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தமிழக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #TNElectionOfficer #SatyabrataSahoo

சென்னை:

தேசிய வாக்காளர் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட வாக்காளர்கள் உதவி மையத்தை ரிப்பன் மாளிகையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளன. காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் எப்போது தேர்தல் நடத்த கூறினாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

100 சதவீத வாக்காளர் அட்டை வழங்கி உள்ளோம். புதிய வாக்காளர் அட்டை பிப்ரவரி 1-ந்தேதி முதல் வழங்கப்படும். வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான தகவல்களுக்கு 1950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரிடம் ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதா? என்று கேட்ட போது, அதுபற்றி சட்டசபை செயலாளரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்றார். #TNElectionOfficer #SatyabrataSahoo

Tags:    

Similar News