செய்திகள்

மதகடிப்பட்டில் வேலை கிடைக்காததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-01-23 17:10 IST   |   Update On 2019-01-23 17:10:00 IST
மதகடிப்பட்டில் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருபுவனை:

திருபுவனை அடுத்த மதகடிப்பட்டு கோகு நகரை சேர்ந்தவர் அரிதாஸ். கொத்தனார். இவரது மனைவி கமலா. இவர்களுக்கு மதியழகன் (21) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மதியழகன் இ.இ.இ. டிப்ளமோ படித்து விட்டு வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் மதியழகனை அரிதாஸ் கொத்தனார் வேலைக்கு அழைத்து சென்றார்.

மதியழகன் வேலைக்கு சென்றதில் இருந்தே படித்து விட்டு இந்த வேலைக்கு வந்து விட்டோம் என மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று தந்தை வேலைக்கு சென்று விட்டார். தாய் கமலா மாடு மேய்க்க சென்றார். வீட்டில் தனியாக இருந்த மதியழகன் மின் விசிறி கொக்கியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அரிதாஸ் திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, ஏட்டு ஜெயதேவன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News