செய்திகள்

10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சட்டப் போராட்டம் - கி.வீரமணி அறிவிப்பு

Published On 2019-01-19 13:14 GMT   |   Update On 2019-01-19 13:14 GMT
10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து சட்டரீதியான போராட்டங்கள் நடத்தப்படும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். #EconomicalWeakerSectionQuota #Veeramani
சென்னை:

சென்னையில் திராவிட கட்சியின் தலைமை அலுவலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் தி.க. தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இது அரசியல் சட்டத்திற்கு புறம்பானது. இட ஒதுக்கீடு என்பது சமூக ரீதியாக சாதியின் அடிப்படையில்தான் வழங்க முடியும். பொருளாதார அடிப்படையில் வழங்க முடியாது.

பொருளாதார அடிப்படையில் உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து  சட்டரீதியான போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார்.

இதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு தொடரப்படும் என குறிப்பிட்டார்.

ஏற்கனவே, பொருளாதார அடிப்படையில் உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #EconomicalWeakerSectionQuota #Veeramani
Tags:    

Similar News