செய்திகள்

பூக்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2019-01-16 16:27 GMT   |   Update On 2019-01-16 16:27 GMT
தருமபுரி மாவட்டத்தில் பூக்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் சாமந்தி பூ, செண்டுமல்லி, குண்டுமல்லி, கனகாம்பரம், சம்பங்கி உள்ளிட்ட பூக்களை அதிகமாக சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பருவமழை பொய்த்துவிட்டதால் சொட்டுநீர் பாசனம், கிணற்று பாசனம் மூலம் பூக்களை விவசாயம் செய்து வருகின்றனர். அப்படி விவசாயம் செய்துவந்த நிலையில் சாமந்தி பூ ரூ. 20-க்கும், சம்பங்கி ரூ. 40-க்கும், செண்டுமல்லி ரூ. 30-க்கும் விற்பனையாகி வந்தது. அதனால் விவசாயிகளுக்கு அறுவடை கூலி கூட கிடைக்கவில்லை என்று வேதனைப்பட்டனர்.

தற்போது பொங்கல் பண்டிகை என்பதால் பூக்களின் விலை உயர்ந்து சாமந்தி பூ ரூ. 140-க்கும், செண்டுமல்லி ரூ. 80-க்கும், குண்டுமல்லி ரூ.800-க்கும், காக்கனாம்பூ ரூ. 400-க்கும், பட்டன் ரோஸ் ரூ.140-க்கும் சம்பங்கி ரூ. 100-க்கும் விற்பனையாகி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

குண்டுமல்லி வரத்து குறைந்து கிலோ ரூ. 800-க்கு விற்கப்படுவதால் ஒரு முழம் பூ ரூ. 100-க்கு விற்கப்படுகிறது. இருந்தாலும் பெண்கள் பிரியமுடன் வாங்கி செல்கின்றனர்.
Tags:    

Similar News