செய்திகள்

119 அடியாக குறைந்த பெரியாறு அணை நீர்மட்டம்

Published On 2019-01-16 10:22 GMT   |   Update On 2019-01-16 10:22 GMT
மழை முற்றிலும் ஓய்ந்துள்ளதால் பெரியாறு அணையின் நீர்மட்டம் 119 அடியாக குறைந்துள்ளது.
கூடலூர்:

கேரளா எல்லைப் பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக பருவமழை பொய்த்து போனதால் ஒருபோக நெல்சாகுபடி மட்டுமே நடைபெற்றது. தற்போதும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை. இதனால் அணைக்கு 186 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 467 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

மேலும் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து 119.25 அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 56.17 அடியாக உள்ளது. 156 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடிநீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45.60 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 80 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 100.86 அடியாக உள்ளது. 9 கன அடி நீர் வருகிறது. 24 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

Tags:    

Similar News