செய்திகள்

ஈரோட்டில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் தீவிரம்

Published On 2019-01-08 16:46 IST   |   Update On 2019-01-08 16:46:00 IST
ஈரோட்டில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. #ErodeJallikattu
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று விவசாய அமைப்பு மற்றும் பொதுமக்கள் விருப்பம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக விவசாய அமைப்பு சார்பில் கலெக்டர் கதிரவனிடம் மனு அளிக்கப்பட்டது. அதன்படி சுப்ரீம் கோர்ட்டின் விதிமுறைகள பின்பற்றி ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஏ.ஈ.டி. பள்ளி மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடத்த கலெக்டர் அனுமதி அளித்தார்.

இந்த ஜல்லிக்கட்டு வருகிற 19-ந் தேதி நடக்கிறது. மேலும் சுப்ரீம் கோர்ட்டு விதிமுறைகளின்படி ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

ஈரோட்டில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது விவசாய அமைப்பினரையும், பொதுமக்களையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

இந்த நிலையில் ஏ.ஈ.டி. பள்ளி மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தீவிரமாக செய்து வருகிறார்கள்.

காளைகள் புறப்பட்டு வரும் வாடி வாசல், காளைகள் சீறிப்பாயும் இடம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டை சுற்றி நின்று மக்கள் பார்க்கும் வகையில் தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. #tamilnews
Tags:    

Similar News