செய்திகள்

திருவாரூர் இடைத்தேர்தல் - அ.தி.மு.க. வேட்பாளர் நாளை அறிவிப்பு - ஓ.பன்னீர்செல்வம்

Published On 2019-01-06 10:43 GMT   |   Update On 2019-01-06 11:11 GMT
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பெயர் நாளை அறிவிக்கப்படும் என துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். #Tiruvarurbyelection #OPanneerSelvam

தேனி:

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து காலியாக உள்ள திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

இதற்கான மனுதாக்கல் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. வருகிற 10-ந்தேதி கடைசி நாளாகும்.

இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. தினகரன் கட்சி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தி.மு.க. சர்பில் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணனும், தினகரனின் அ.ம.மு.க. சார்பில் காமராஜூம் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்ய அக்கட்சியின் ஆட்சிமன்றக்குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. பின்னர் அது தள்ளி வைக்கப்பட்டு நேற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று நடந்த ஆட்சிமன்ற குழுவில் அ.தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால் வேட்பாளர் யார் என்று முடிவு செய்யப்பட வில்லை.

இந்த நிலையில் திருவாரூர் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

தேனியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த ஓ.பன்னீர் செல்வம் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க வேட்பாளர் நாளை (7-ந் தேதி) காலை அறிவிக்கப்படுவார். தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் இடைத்தேர்தலை நடத்த வேண்டாம் என தெரிவித்து வருகின்றனர். எப்போது தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.கவே வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார். #Tiruvarurbyelection #OPanneerSelvam

Tags:    

Similar News