செய்திகள்

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம்- சுகாதார துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்

Published On 2019-01-03 08:22 GMT   |   Update On 2019-01-03 08:22 GMT
கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரம் தொடர்பாக சுகாதார துறை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #HCMaduraiBench #HIVBlood #SatturPregnantwoman
மதுரை:

மதுரையை சேர்ந்த அப்பாஸ்மந்திரி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டார்.

அவருக்கு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ரத்தம் செலுத்தப்பட்டது. அதன்பின்னர் அவரது உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரிய வந்தது.

தற்போது அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மன உளைச்சலால் அவதிப்படும் அவருக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.


மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் ரத்ததானம் பெறுவதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.

மேற்கண்டவாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து தமிழக சுகாதார துறை செயலாளர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். #HCMaduraiBench #HIVBlood #SatturPregnantwoman
Tags:    

Similar News