செய்திகள்

திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Published On 2018-12-31 17:42 IST   |   Update On 2018-12-31 17:50:00 IST
திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. #ThiruvarurByElections #ElectionCommision
சென்னை:

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவை தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலியாக இருந்து வருகிறது.

இந்நிலையில், திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.



இடைத்தேர்தலுக்கான மனுதாக்கல் ஜனவரி 3ம் தேதியும், மனுதாக்கல் செய்ய இறுதி நாள் ஜனவரி 10ம் தேதி என்றும்,  ஜனவரி 11 முதல் வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம் என்றும், வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 14ம் தேதி இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணிக்கை ஜனவரி 31ம் தேதி அன்று நடைபெறும். இதையடுத்து திருவாரூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது. #ThiruvarurByElections #ElectionCommision
Tags:    

Similar News