செய்திகள்

பரமத்தி வேலூரில் வாழைத்தார் விலை சரிவு

Published On 2018-12-29 22:45 IST   |   Update On 2018-12-29 22:45:00 IST
பரமத்தி வேலூரில் வாழைத்தார் விலை சரிந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பரமத்திவேலூர்:

பரமத்தி வேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா ,கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

மேலும் விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் சந்தைக்கு தங்களது தோட்டத்தில் விளைவித்த வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்யும் வசதி உள்ளது.

கடந்த வாரம் 600 வாழைத்தார்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400 வரையிலும், ரஸ்தாலி ரூ.450-க்கும், பச்சைநாடன் ரூ.450-க்கும், கற்பூரவள்ளி ரூ.500-க்கும் ஏலம் போனது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.8-க்கு ஏலம் போனது.

நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 750 வாழைத்தார்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200 வரையிலும், ரஸ்தாலி ரூ.250-க்கும், பச்சைநாடன் ரூ.100-க்கும், கற்பூரவள்ளி ரூ.250-க்கும் ஏலம் போனது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.6-க்கு ஏலம் போனது. கடந்த வாரத்தை விட நேற்று விலை சரிவு ஏற்பட்டது.
Tags:    

Similar News