செய்திகள்

பஸ்சில் சென்ற மூதாட்டியிடம் ரூ.86 ஆயிரம் கொள்ளை

Published On 2018-12-21 11:37 IST   |   Update On 2018-12-21 11:37:00 IST
பஸ்சில் சென்ற மூதாட்டியிடம் ரூ.86 ஆயிரம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

அண்ணாநகர் கிழக்கு ஆர்.வி.நகரைச் சேர்ந்தவர் அலமேலு (வயது 65). மதுரவாயலில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று மாலை மாநகர பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அவர் அருகே 2 பெண்கள் அமர்ந்து இருந்தனர்.

பஸ் அமைந்தகரை என். எஸ்.கே. நகர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது அருகில் இருந்த பெண்கள் சில்லறை காசுகள் கீழே கிடப்பதாக அலமேலுவிடம் கூறினார்கள்.

உடனே அவர் கீழே கிடந்த சில்லரைகளை குனிந்து எடுக்கத் தொடங்கினார். அப்போது அந்த பெண்கள் அலமேலு கையில் இருந்த ரூ.86 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து விட்டு பஸ்சில் இருந்து இறங்கி சென்றனர்.

இதுகுறித்து அரும்பாக்கம் போலீசில் அலமேலு புகார் செய்தார். பஸ் நிறுத்தத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News