செய்திகள்

பொன்.மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும் - அமைச்சர் சிவி சண்முகம்

Published On 2018-12-20 07:17 GMT   |   Update On 2018-12-20 07:17 GMT
பொன்.மாணிக்கவேல் மீது அவரின் கீழ் பணியாற்றும் காவல் துறையினர் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என அமைச்சர் சிவி சண்முகம் கூறியுள்ளார். #CVShanmugam #PonManickavel
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் தாலுக்கா அலுவலக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீதிமன்ற கட்டிடத்தினை சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தகில்ரமானி மற்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தனர்.

பின்னர் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மீது அவரின் கீழ் பணியாற்றும் காவல் துறையினர் குற்றச்சாட்டுகள் வைத்துள்ளனர். அவர்களை இப்படித்தான் விசாரணை செய்ய வேண்டும், இப்படித்தான் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

தனக்கு கீழ் பணியாற்றுபவர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும். மனித உரிமைகளை மீறக் கூடாது. அவர் மீது கூறப்படுவது மிகப்பெரிய குற்றச்சாட்டு, பொன்.மாணிக்கவேல் என்பதால் அவர் மீது விசாரணை நடத்தாமல் இருக்க முடியாது. அவர் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும்.

விசாரணையின் போது தமிழக அரசு தனது நிலைப்பாட்டினை எடுத்துரைக்கும்.

மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு எந்தவித பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தகில் ரமானி பேசியதாவது:-

புதிய சார்பு நீதிமன்ற கட்டிடம் அமைப்பின் கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது.

அதே போன்று காஞ்சீபுரத்தில் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற கட்டிடங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற வழக்கறிஞர்களின் கோரிக்கையினை சென்னை உயர்நீதி மன்றம் கவனத்தில் கொண்டு விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளும்.



வழக்கு தொடுத்தவர்கள் பயன்பெறும் வகையில் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டிய உதவிகளை உயர்நீதிமன்றம் செய்து கொடுக்கும். இதனால் வழக்கு தொடுத்தவர்கள் பயன் பெறுவர். புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதன் மூலம் இளம் வழக்கறிஞர்கள் நிறைய அனுபவங்களை பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் விமலா, பவானி சுப்பராயன், மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தலீலா, மாவட்ட நீதிமன்றம்-2 நீதிபதி கருணாநிதி, மற்றும் நீதிபதிகள் கீதாராணி, பாக்கியஜோதி, மாவட்ட கலெக்டர் பொன்னையா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி.

காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், நிர்வாகிகள் வி.சோமசுந்தரம், கே.யு.எஸ்.சோமசுந்தரம், வள்ளிநாயகம், காஞ்சி பன்னீர்செல்வம், அத்திவாக்கம் ரமேஷ், அக்ரி நாகராஜன், படுநெல்லிதயாளன், அதிமுக வழக்கறிஞர் அணி கே.ரவிச்சந்திரன், ஜி.எம்.சி. ஜீவரத்தினம்

பார் அசோசியேசன் தலைவர் கார்த்திகேயன், செயலாளர் சுப்பிரமணி, லாயர் அசோசியேசன் தலைவர் பார்த்தசாரதி, செயலாளர் கார்த்திகேயன்,

அட்வகேட் அசோசியேசன் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் சத்தியமூர்த்தி, மூத்த வழக்கறிஞர்கள் டி.சி.வரதராஜன், டோமேசன், ஒய்.தியாகராஜன், கேதார் நாத், தாங்கி பழனி, துரைமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #CVShanmugam #PonManickavel
Tags:    

Similar News