செய்திகள்

சங்கரன்கோவிலில் கடையில் திருடிய 3 வாலிபர்கள் கைது

Published On 2018-12-19 12:32 GMT   |   Update On 2018-12-19 12:32 GMT
சங்கரன்கோவிலில் கடையின் பூட்டை உடைத்து திருடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அச்சம்பட்டி ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் சண்முகையா (வயது 82). சம்பவத்தன்று இரவு இவர் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் காலையில் கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த 1000 ரூபாய் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

 இது குறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே சங்கரன்கோவில் பகுதியில் தொடர் திருட்டுகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

திருட்டு சம்பவங்களை தடுக்க சங்கரன்கோவில் டி.எஸ்.பி. ராஜேந்திரன் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் தீவிர வாகன சோதனை மற்றும் இரவு நேர ரோந்து பணிகளில் ஈடுபட உத்தரவிட்டார். இதன் பேரில் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனி பகுதியில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர். 

விசாரணையில் கருத்தானுரை சேர்ந்த சண்முகையா மகன் இளங்கோ (22), மனோகரன் மகன் மதன்குமார் (17), கண்ணன் மகன் முரளிஆனந்த் (19) என தெரியவந்தது. இவர்கள் பெட்டிக்கடையை உடைத்து ரூ. 1000 ஐ திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் இதை தவிர வேறு ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News