செய்திகள்

வைகை அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

Published On 2018-12-19 10:22 GMT   |   Update On 2018-12-19 10:22 GMT
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
கூடலூர்:

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து ஏமாற்றி வருவதால் வைகை மற்றும் முல்லைபெரியாறு அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் வேகமாக குறையத்தொடங்கியுள்ளது. இருந்தபோதும் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் நேற்றுவரை 1700 கனஅடிநீர் திறக்கப்பட்டது.

தற்போது பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 60 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 54.69 அடியாக உள்ளது. 475 கனஅடிநீர் வருகிறது.

முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 126.55 அடியாக உள்ளது. 187 கனஅடிநீர் வருகிறது. 900 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 51.20 அடியாக உள்ளது. 11 கனஅடிநீர் வருகிறது. நீர்திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 122.18 அடியாக உள்ளது. 9 கனஅடிநீர் வருகிறது. 27 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

Tags:    

Similar News