செய்திகள்

மழை முற்றிலும் ஓய்ந்தது - 127 அடியாக குறைந்த பெரியாறு அணை நீர்மட்டம்

Published On 2018-12-15 08:38 GMT   |   Update On 2018-12-15 08:38 GMT
மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 127.65 அடியாக குறைந்துள்ளது.
கூடலூர்:

இந்த ஆண்டு பருவமழை கைகொடுத்ததால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை எட்டியது. 142 அடிவரை உயரும் என எதிர்பார்த்த நிலையில் மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டமும் குறையத்தொடங்கியது.

அதன்பின்னர் சாரல்மழை மட்டுமே பெய்து வந்ததால் அணையின் நீர்மட்டம் உயராமலேயே இருந்தது. தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு 187 கனஅடிநீர் வருகிறது. இருந்தபோதும் தமிழக பகுதிக்கு 900கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து 127.65 அடியாக உள்ளது.

வைகை அணையின் நீர்மட்டம் 56.79 அடியாக உள்ளது. 859 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து பாசனம் மறறும் மதுரை மாநகர குடிநீருக்காக 1760 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.90 அடியாக உள்ளது. 21 கனஅடிநீர் வருகிறது. 25 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 124.47 அடியாக உள்ளது. 17 கனஅடிநீர் வரும் நிலையில் 30 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

Tags:    

Similar News