செய்திகள்

பள்ளி மைதானத்தில் மோதல்- பிளஸ்-2 மாணவர்கள் 12 பேர் சஸ்பெண்டு

Published On 2018-11-28 11:17 GMT   |   Update On 2018-11-28 11:17 GMT
பள்ளி மைதானத்தில் மோதலில் ஈடுபட்ட பிளஸ்-2 மாணவர்கள் 12 பேரை 10 நாட்களுக்கு இடைநீக்கம் செய்து தலைமை ஆசிரியர் உத்தரவிட்டார்.
கோவை:

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

சம்பவத்தன்று இப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த மாணவர்கள் மோதலில் ஈடுபட்டு ஒருவரையொருவர் அடித்து உதைத்து தாக்கிக் கொண்டனர்.

இதையறிந்த தலைமை ஆசிரியர் சிவன்ராஜ், மோதலில் ஈடுபட்ட மாணவர்களிடம் விசாரித்தார். அவர்களின் பெற்றோர்களையும் அழைத்து பேசினார். பின்னர் மாணவர்களின் பெற்றோர்கள் இனிமேல் இதுபோன்று நடக்காது என எழுத்து மூலம் தெரிவித்தனர்.

இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு போலீசாரின் உதவியுடன் உரிய அறிவுரைகள் வழங்கி அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. இருந்தாலும் பிற மாணவர்களுக்கு கட்டுப்பாடும், ஒழுக்கமும் வர வேண்டும் என்பதற்காக பள்ளியின் சார்பில் 12 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மோதலில் ஈடுபட்ட பிளஸ்-2 மாணவர்கள் 12 பேரையும் 10 நாட்களுக்கு இடைநீக்கம்(சஸ்பெண்டு)செய்து தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் உத்தரவிட்டார்.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் கூறுகையில், பிற மாணவர்களுக்கு கட்டுப்பாடும், ஒழுக்கமும் வர வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது தவறை உணர்ந்துள்ளதால் அடுத்த வாரம் முதல் மீண்டும் வகுப்புக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றார். #tamilnews
Tags:    

Similar News