செய்திகள்

கோவையில் கால் டாக்சி டிரைவர் மீது தாக்குதல்- ரெயில் நிலையத்தில் போராட்டம்

Published On 2018-11-27 12:02 GMT   |   Update On 2018-11-27 12:02 GMT
கோவையில் கால் டாக்சி டிரைவரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி ரெயில் நிலையத்தில் கால்டாக்சி இயக்கும் டிரைவர்கள் 40-க்கும் மேற்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை:

கோவை வெள்ளலூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35). இவர் கால் டாக்சி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

சிவக்குமார் இன்று அதிகாலை 3 மணியளவில் காந்திபுரம் கிராஸ்கட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக ஊட்டியில் இருந்து பாலக்காடு சென்ற அரசு பஸ்சை முந்த முயன்றார்.

இதில் ஆத்திரமடைந்த அரசு பஸ் டிரைவர் பஸ்சில் இருந்து இறங்கி வந்து சிவக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் அங்கு 2 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அந்த வழியாக வந்த மற்றொரு அரசு பஸ், டிரைவர் கண்டக்டர், லாரி டிரைவர் ஆகியோர் உள்பட 6 பேர் சேர்ந்து சிவக்குமாரை தாக்கினர். இதில் காயம் அடைந்த சிவக்குமார் தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே சிவக்குமாரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கோவை ரெயில் நிலையத்தில் இருந்து கால்டாக்சி இயக்கும் டிரைவர்கள் 40-க்கும் மேற்பட்ட டாக்சிகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
Tags:    

Similar News