செய்திகள்

காரைக்கால் மாவட்ட கஜா புயல் சேத அறிக்கையை விரைந்து அனுப்ப வேண்டும்- வைத்திலிங்கம் அறிவுறுத்தல்

Published On 2018-11-21 12:24 GMT   |   Update On 2018-11-21 12:24 GMT
காரைக்கால் மாவட்ட கஜா புயல் சேத அறிக்கையை விரைந்து அனுப்ப கோரி அதிகாரிகளுக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவுறுத்தியுள்ளார். #gajacyclone #cyclone
காரைக்கால்:

புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம், கஜா புயலில் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்தை, பார்வையிட்டார். குறிப்பாக, மீராபள்ளி வீதி, தோமாஸ் அருள்வீதி, மத கடி, தலத்தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளையும், புயலின் போது கடல்நீர் உள் புகுந்த தலத்தெருபேட் பகுதியையும் சபாநாயகர் வைத்திலிங்கம் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து, காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில், புதுவை வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட கலெக்டர் கேசவன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் வைத்திலிங்கம் கஜா புயல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனையின் முடிவில், காரைக்கால் மாவட்ட கஜா புயல் சேதம் குறித்து, முழுமையான அறிக்கை தயார் செய்யவேண்டும். அதில் எந்தவித குறைபாடுகளும் இருக்ககூடாது. அந்த அறிக்கையை வைத்துதான் மத்திய அரசிடம் சேத நிவாரணம் பெறமுடியும். அதேசமயம், அறிக்கையாக விரைவாக தயார் செய்து அனுப்ப வேண்டும். என்றார். #gajacyclone #cyclone
Tags:    

Similar News