செய்திகள்

புயல் பாதிப்பு பகுதிகளில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு

Published On 2018-11-21 06:48 GMT   |   Update On 2018-11-21 06:48 GMT
தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஆய்வு செய்தார். #BanwarilalPurohit #GajaCyclone
நாகை:

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் சென்றவண்ணம் உள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையிட்டார்.

இந்நிலையில், புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட முடிவு செய்த ஆளுநர் பன்வாரிலால் நேற்று இரவு சென்னையில் இருந்து நாகைக்கு புறப்பட்டார். இன்று காலை நாகையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.



பின்னர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட சென்றார். முதலில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் ஆளுநர் ஆய்வு செய்தார். பின்னர் மற்ற பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களையும் அவர் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். #BanwarilalPurohit #GajaCyclone
Tags:    

Similar News