செய்திகள்

தனியார், அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல் பாதித்த 27 பேருக்கு சிகிச்சை

Published On 2018-11-19 08:32 GMT   |   Update On 2018-11-19 08:32 GMT
குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். #SwineFlu
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டு 6 பேர் பலியாகி உள்ளனர். இந்த நோயை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். நோய் பாதித்தவர்கள் கண்டிறியப்பட்டு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து காய்ச்சல், இருமல், வாந்தி இருந்தால் அவர்கள் டாக்டரை அணுகி சிகிச்சை பெறவும் அறிவுறுத்தி வருகின்றனர். டெங்கு கொசு புழு உற்பத்தி ஆவதை தடுக்க வீடுகளில் சென்று தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். டெங்கு கொசு புழு உற்பத்தி ஆவதை கண்டு பிடிக்கப்பட்டால் அவர்களுக்கு நகராட்சி அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஆண்கள் 2 பேரும், பெண்கள் 9 பேரும், சிறுவர்கள் 6 பேர் உள்பட 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தனியார் ஆஸ்பத்திரியில் பெரியவர்கள், சிறியவர்கள் என 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டாக்டர்கள் பன்றி காய்ச்சல் பாதித்தவர்களை கண்காணித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். #SwineFlu

Tags:    

Similar News