செய்திகள்

5 சப்-கலெக்டர்கள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

Published On 2018-11-19 08:37 IST   |   Update On 2018-11-19 08:37:00 IST
தமிழகத்தில் 5 சப்-கலெக்டர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. #TNGovernment
சென்னை:

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, தி.நகர் மண்டல குடிமைப் பொருள் வழங்கல் துறை உதவி ஆணையர் சி.நயினார் பிள்ளை, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியராகவும், தூத்துக்குடி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் இரா.செழியன், சேலம் வருவாய் கோட்டாட்சியராகவும், நெல்லை, தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டம் (நில எடுப்பு) முன்னாள் தனித்துணை ஆட்சியர் சீ.மஹேஸ்வரன், சேலம் மாவட்டம், சங்ககிரி, வருவாய் கோட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, சென்னை பெருநகர மாநகராட்சி வடக்கு மண்டல நிர்வாக துணை ஆணையர் அ.லலிதா, சேலம் மாவட்டம், மேட்டூர் வருவாய் கோட்டாட்சியராகவும், திருச்சி கலால் உதவி ஆணையர் சி.ராஜ்குமார், காஞ்சீபுரம் மாவட்டம், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். #TNGovernment
Tags:    

Similar News