செய்திகள்

விபத்து தடுப்பு விளக்க கூட்டம் - போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது

Published On 2018-11-18 18:28 GMT   |   Update On 2018-11-18 18:28 GMT
அரியலூர் மாவட்டத்தில் விபத்து தடுப்பு குறித்த செயல் விளக்க கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் விபத்து தடுப்பு குறித்த செயல் விளக்க கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கினார். அப்போது அவர் மண்டல போக்குவரத்து அதிகாரி, தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட ஊரக சாலை உயர் அதிகாரிகளுடன் மாவட்டத்தில் விபத்துகளை தடுப்பது குறித்து கலந்துரையாடினார்.

கூட்டத்தில் வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்துதல், சாலையில் வேக கட்டுப்பாடு பற்றிய எச்சரிக்கை பலகை அதிகமாக வைத்தல், ஒளிரும் தகட்டினை சாலையோர மரங்கள் மற்றும் கல்வெட்டு பாலங்களில் பொருத்துதல், சாலைகளில் பாதசாரிகளுக்கு சாலையை கடக்க வர்ணம் பூசுதல், அதிகப்படியான வேகதடைகளை கிராமபுற சாலைகளில் அமைத்தல், முக்கிய சந்திப்புகளில் உயர் கோபுர மின்கம்ப விளக்குகள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளை செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா, போலீஸ் தனிப் பிரிவு இன்ஸ்பெக்டர் நித்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News