செய்திகள்

இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பெயரில் போலி ரசீது- வாலிபர் கைது

Published On 2018-11-16 16:49 GMT   |   Update On 2018-11-16 16:49 GMT
இன்சூரன்சு நிறுவனத்தின் பெயரில் போலி ரசீது கொடுத்து மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மதுரை:

மதுரை திருமங்கலம் அருகேயுள்ள செக்கா னூரணியை சேர்ந்தவர் ஜெயபாண்டி. இவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். உசிலம்பட்டி அருகில் உள்ள குப்பானம்பட்டியைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (35) என்பவர் மூலம் வருடாந்திர லாரி இன்சூரன்சை புதுப்பித்து வந்தார்.

இந்த நிலையில் ஜெயபாண்டிக்கு சொந்தமான லாரி சம்பவத்தன்று விபத்துக்கு உள்ளானது. இதையடுத்து அவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மதுரை கிளையில் இழப்பீடு கோரி விண்ணப்பித்து உள்ளார்.

அப்போது தான் ஜெயபாண்டி தாக்கல் செய்த இன்சூரன்ஸ் ரசீது போலி என்ற விவரம் தெரியவந்தது.

மதுரை தனியார் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர் பாலமுருகன், இது தொடர்பாக உசிலம்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பெயரில் போலி ஆவணம் தயாரித்து ரசீது வழங்கியதாக அலெக்ஸ்பாண்டியனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News