செய்திகள்

பெரும்பாறையில் சூறாவளி காற்றுக்கு பறந்த மேற்கூரை

Published On 2018-11-16 16:07 GMT   |   Update On 2018-11-16 16:07 GMT
பெரும்பாறையில் சூறாவளி காற்றுக்கு பறந்து விழுந்த மேற்கூரையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெரும்பாறை:

பெரும்பாறை மெயின்ரோடு பகுதியில் ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான கடை உள்ளது. இங்கு மாற்றுத்திறனாளி மோகன் என்பவர் டி.வி சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார். நேற்று இரவில் இருந்து இப்பகுதியில் சூறாவளிகாற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

இன்று காலை சர்வீஸ் சென்டர் மேற்கூரை சூறாவளி காற்றுக்கு முற்றிலும் பெயர்ந்து தாண்டிக்குடி சாலையில் விழுந்தது.

மெயின்ரோட்டில் விழுந்ததால் வாகனங்கள் செல்லமுடியாமல் அணிவகுத்து நின்றன. அதன்பின்பு ஊழியர்கள் 2 மணிநேரம் போராடி மேற்கூரையை அப்புறப்படுத்தினர். அதன்பின்பு போக்குவரத்து சீரானது. இதேபோல் மூலக்கடை-மஞ்சள்பரப்பு சாலையில் இலவமரம் வேரோடு சாய்ந்து.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானல் மேல்மலை மற்றும் கீழ்மலைப் பகுதியில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் இருளிலேயே தவித்தனர். இன்று காலை ஏரிச்சாலையிலும் மரங்கள் முறிந்து விழுந்தது. இதனை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News