செய்திகள்

கஜா புயல் எதிரொலி- மரக்காணத்தில் தயார் நிலையில் 1800 மணல் மூட்டைகள்

Published On 2018-11-15 12:18 GMT   |   Update On 2018-11-15 12:18 GMT
கஜா புயல் இன்று கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால் மரக்காணத்தில் தயார் நிலையில் 1800 மணல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. #gajacyclone #gaja #rain

மரக்காணம்:

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் இன்று கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கடல் அலையின் சீற்றம் இன்று அதிகமாக காணப்பட்டது. மேலும் மரக்காணம் பகுதியில் இன்று காலை முதல் லேசான மழை தூறிக்கொண்டிருந்தது.

இதைத்தொடர்ந்து மரக்காணத்தை சுற்றியுள்ள எக்கியார்குப்பம், அனு மந்தை குப்பம் உள்பட 19 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

மழைகாலங்களில் வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்படும் பனிச்சமேடு, செட்டிக்குப்பம், வசந்த்குப்பம் ஆகிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு குழுவினர் 50 பேர் முகாமிட்டுள்ளனர்.


கஜா புயல் கரையை கடக்கும்போது மரக்காணம் பகுதியில் பாதிப்பு ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இதையொட்டி மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவல கத்தில் 1800 மணல் மூட்டைகள் மற்றும் சிமெண்ட் மூட்டைகள், 5 டன் சவுக்கு கட்டைகள், ஜே.சி.பி. எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் கலெக்டர் சுப்பிரமணியன், பேரிடர் மேலாண்மை திட்ட இயக்குனர் பழனிசாமி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் பனிச்சமேடு பகுதிக்கு சென்று அங்கு மேற் கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை பார்வையிட்டு பேரிடர் மீட்பு குழு வினருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினர்.

இதில் தாசில்தார் தன லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி, பேரூராட்சி அலுவலர் ராஜீ மற்றும் மரக்காணம் இன்ஸ்பெக்டர் மைக்கெல் இருதயராஜ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். #gajacyclone #gaja #rain

Tags:    

Similar News