செய்திகள்

கஜா புயல் மிரட்டலால் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வு - மறுதேதி அறிவிப்பு

Published On 2018-11-15 08:05 GMT   |   Update On 2018-11-15 08:05 GMT
கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு நடைபெறும் மறுதேதி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. #CycloneGaja #AnnaUniversity #SemesterExam
சென்னை:

கஜா புயல் சென்னையை இன்று தாக்கலாம் என வானிலை ஆய்வு மையம் முன்னர் எச்சரித்ததால் அண்ணா பல்கலைக்கழகம் இன்று (15-ம் தேதி) நடத்த திட்டமிட்டிருந்த செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக தேர்வு கட்டுப்பாட்டாளர் வெங்கடேசன் தெரிவித்திருந்தார்.



இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் வரும் 22-ம் தேதி (வரும் வியாழக்கிழமை) நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது. #CycloneGaja #AnnaUniversity #SemesterExam
Tags:    

Similar News