செய்திகள்
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

கஜா புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னை- கடலூருக்கு விரைவு

Published On 2018-11-13 11:06 GMT   |   Update On 2018-11-13 11:06 GMT
கஜா புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னை மற்றும் கடலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். #Gaja #GajaCyclone
அரக்கோணம்:

வங்க கடலில் உருவாகியுள்ள கஜா புயல் 15-ந்தேதி கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில் இருந்து ஒரு குழுவிற்கு 27 பேர் வீதம் 10 குழுவினர் மழை, புயல் ஆகியவற்றினால் ஏற்படும் இடர்பாடு காலங்களில் உதவி செய்வதற்காக மொத்தம் 270 பேர் உதவி கமாண்டர் ராஜன்பாலு தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மீட்பு படையினர் கடலூர், சிதம்பரம், புதுச்சேரி, ராமநாதபுரம், சென்னை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு தனித்தனியாக பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.

மறு அறிவிப்பு வரும் வரை வீரர்கள் அந்தந்த பகுதிகளில் பணியில் ஈடுபட்டிருப்பார்கள். #Gaja #GajaCyclone
Tags:    

Similar News