செய்திகள்

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை அகற்றும் வரை எனது போராட்டம் ஓயாது - தினகரன் ஆவேசம்

Published On 2018-11-12 05:09 GMT   |   Update On 2018-11-12 05:09 GMT
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை அகற்றும் வரை எனது போராட்டம் ஓயாது என துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசினார். #EdappadiPalaniswami #Dhinakaran

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அ.ம.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரதத்தை முடித்து வைத்து துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-

நிலக்கோட்டை தொகுதியில் 1977-க்கு பிறகு 1996 தேர்தல் நீங்கலாக பிற தேர்தலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நிறுத்திய வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். ஜெயலலிதாவால் எம்.எல்.ஏ.வாக ஆக்கப்பட்ட 18 பேர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தகுதி நீக்கம் செய்துள்ளார்.

இது அவருக்கு தற்காலிக வெற்றிதான். மக்கள் ஆதரவு இல்லாத ஆட்சி விரைவில் அகற்றப்படும். மக்கள் இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.


இடைத்தேர்தல் மட்டுமல்லாது மக்களவை தேர்தல் உள்பட எந்த தேர்தல் வந்தாலும் அ.ம.மு.க. வெற்றி பெறும். அ.தி.முக. டெபாசிட் கூட வாங்க முடியாது. வெற்றியும் பெற முடியாது. என்னை துரோகி என்கிறார்கள். ஆனால் உண்மையான துரோகி தற்போதைய ஆட்சியாளர்கள்தான்.

எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆட்சியை அகற்றும் வரை எனது போராட்டம் ஓயாது. நடைபெற உள்ள இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் பேசுகையில், ஜெயலலிதாவுக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார். இதனை நிரூபித்தால் அதற்கான தண்டனையை பெற தயாராக இருக்கிறோம். ஆனால் உண்மைக்கு புறம்பாக அவதூறாக பேசியவர்களுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள் என்றார். #EdappadiPalaniswami #Dhinakaran

Tags:    

Similar News