செய்திகள்
கோடம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய பெண்- வாலிபர் கைது
கோடம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
கோடம்பாக்கம் சிவன் கோவில் தெருவில் நேற்று இரவு சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண் உள்பட இரண்டு பேரை வடபழனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துருபிடித்து விசாரணை நடத்தினார்.
அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் சூளைமேடு நேரு நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி, ராமு என்பது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்து 2 கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட லட்சுமி மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.