செய்திகள்

திருவாரூரில் ஒரு வயது குழந்தைக்கு பன்றிக் காய்ச்சல்

Published On 2018-11-02 13:09 IST   |   Update On 2018-11-02 13:09:00 IST
திருவாரூரில் ஒரு வயது குழந்தை சாதிகாவுக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்ததையடுத்து குழந்தைக்கு தற்போது தீவிர கண்காணிப்பில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த துளசேந்திரபுரம் பழம் பேட்டையை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி சண்முகவள்ளி. இவர்களுக்கு ஒரு வயதில் சாதிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் குழந்தை சாதிகாவுக்கு சிறுநீரில் கிருமி தொற்று ஏற்பட்டதால் திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதற்கிடையே சாதிகாவின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில், பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. தற்போது சாதிகா சிறப்பு தனி வார்டில் டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் விஜயகுமார், கூறியதாவது:-

குழந்தை சாதிகாவுக்கு தற்போது தீவிர கண்காணிப்பில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. குழந்தையின் உடல் நிலை தேறி வருகிறது. மேலும் 44 பேர் காய்ச்சலுக்காக இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது ரத்த மாதிரிகளை பரிசோதித்ததில், இதுவரை டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் இருப்பதாக கண்டறியப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News