செய்திகள்
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் வரிசையாக நிற்கும் காட்சி.

2 நாட்களில் தீபாவளி சிறப்பு பஸ்களுக்கு 7187 பேர் முன்பதிவு

Published On 2018-11-02 05:09 GMT   |   Update On 2018-11-02 05:09 GMT
தீபாவளி பண்டிகைக்காக திறக்கப்பட்ட சிறப்பு முன்பதிவு மையங்களில் 2 நாட்களில் மட்டும் 7187 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்றும் ஏராளமான பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர். #Diwali #SpecialBuses
சென்னை:

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக, பொது மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழகம் முழுவதும் 20,567 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த பஸ்கள் இன்று முதல் 5-ந்தேதிவரை இயக்கப்படுகிறது. இதில் சென்னையில் இருந்து மட்டும் 11,367 பஸ்கள் இயக்கப்படுகின்றன. மற்ற நகரங்களில் இருந்து 9,200 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

இதேபோல் தீபாவளி முடிந்து மீண்டும் சென்னை உள்பட பல ஊர்களுக்கு திரும்பி வர வசதியாக நவம்பர் 7, 8, 9 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.


தீபாவளி சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு செய்வதற்காக கோயம்பேட்டில் 26 முன்பதிவு மையங்கள் செயல்படுகிறது. இது தவிர தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையத்தில் 2, மாதவரம், பூந்தமல்லி பஸ் நிலையங்களில் தலா 1 என்ற அளவில் மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் கடந்த புதன்கிழமை திறக்கப்பட்டன.

சிறப்பு முன்பதிவு மையம் திறக்கப்பட்ட 2 நாட்களில் மட்டும் 7187 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்றும் ஏராளமான பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர்.

முன்பதிவு செய்ய வரும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பயணச் சீட்டுகளை விரைந்து வழங்கும் வகையில் ஊழியர்கள் போதிய அளவில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.  #Diwali #SpecialBuses
Tags:    

Similar News