செய்திகள்

திருச்சியில் கல்லூரி மாணவி மாயம்- கடத்தலா? போலீசார் விசாரணை

Published On 2018-11-01 20:07 IST   |   Update On 2018-11-01 20:07:00 IST
திருச்சியில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:

திருச்சி எடமலைப்பட்டி புதூர் இந்திராநகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் வனஜா (வயது 19). இவர் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு வணிகவியல் துறை படித்து வருகிறார். 

இவர் தினமும் பேருந்தில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்று அதே போல் கல்லூரி செல்வதாக கூறி விட்டு தனது வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். ஆனால் மாலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வர வில்லை. இதனால் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனாலும் வனஜா குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து மாணவியின் தந்தை  கண்ணன் எடமலைப் பட்டிபுதூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குபதிவு செய்து மாணவி வனஜாவை மர்ம நபர்கள் யாரேனும் கடத்திச் சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார். 

ஆலங்குடி அருகே மாயமான இளம்பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் திருச்சி கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News