செய்திகள்

சேலத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை- பாதிரியார் மீது புகார்

Published On 2018-11-01 17:08 IST   |   Update On 2018-11-01 17:08:00 IST
சேலத்தை சேர்ந்த ஒரு பாதிரியார் மீது இளம்பெண் ஒருவர் சேலம் கமி‌ஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
சேலம்:

‘மீ டு’ வில் பிரபல நடிகர்கள், கவிஞர்கள் உள்பட பலர் மீது நடிகைகள், பாடகிகள் உள்பட பலர் புகார் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த ஒரு பாதிரியார் மீது இளம்பெண் ஒருவர் சேலம் கமி‌ஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.

அந்த புகாரில் சேலத்தை சேர்ந்த ஒரு பிரசித்தி பெற்ற ஆலயத்தின் பாதிரியார் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாவும், அப்போது தான் மறுத்ததால் ஆடைகளை கிழித்து தொந்தரவு செய்ததாகவும் கூறி இருந்தார்.

அந்த புகார் குறித்து மாநகர உதவி கமி‌ஷனர் ஒருவரை விசாரிக்குமாறு கமி‌ஷனர் உத்தரவிட்டார். அதன்பேரில் உதவி கமி‌ஷனர் அந்த பெண்ணை அழைத்து விசரணை நடத்தினார். அப்போது கண் கலங்கிய அந்த பெண் கதறி அழுதார். மேலும் அந்த பாதிரியாரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News