செய்திகள்

செய்துங்கநல்லூர் அருகே வேன்-பைக் மோதல்- நகைக்கடை அதிபர் மகன் பலி

Published On 2018-10-31 17:19 IST   |   Update On 2018-10-31 17:25:00 IST
செய்துங்கநல்லூர் அருகே வேனும்-பைக்கும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் நகைக்கடை அதிபர் மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

செய்துங்கநல்லூர்:

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பர்கன் தெருவை சேர்ந்தவர் சாதிக் . இவரது மகன் ஆசிப் (வயது 20). இவர் பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். சாதிக்கு சொந்தமான நகை கடை ஏரலில் உள்ளது. நேற்று இரவு 7 மணிக்கு கல்லூரியில் இருந்து ஆசிப் ஏரலுக்கு பைக்கில் சென்றார். இவருடன் ஏரல் வடக்கு பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பைசல் (18) என்பவரும் சென்றார்.

பைக் கருங்குளம் அருகே உள்ள புளியங்குளம் விலக்கில் வந்த போது எதிரே திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு கழுகுமலை அருகே உள்ள குலகட்டான் குறிச்சியை நோக்கி வந்த கார் நேருக்குநேர் பயங்கரமாக மோதின.

இதில் ஆசிப், பைசல் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ஆசிப் உயிரிழந்தார். பைசல் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார்.

இது குறித்து தகவலறிந்த செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் சோமன் ராஜன், சப் -இன்ஸ்பெக்டர் சதீஷ், ரவிக்குமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பைசலை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான ஆசிப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேனை ஓட்டி வந்த கழுகு மலை முதலியார் மேற்கு தெருவை சேர்ந்த ராஜா(42) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News