செய்திகள்

மதுராந்தகம் அருகே வங்கியில் ரூ. 7 லட்சம் கையாடல் - கேஷியர் கைது

Published On 2018-10-31 07:49 GMT   |   Update On 2018-10-31 07:49 GMT
மதுராந்தகம் அருகே வங்கியில் ரூ. 7 லட்சம் பணத்தை கையாடல் செய்த கேஷியரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காஞ்சீபுரம்:

மதுராந்தகம் அருகே உள்ள சித்தாமூரில் ‘சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா’ வங்கி உள்ளது. இங்கு கேஷியராக பணியாற்றி வந்தவர் மோகன். இவர் கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக இங்கு பணிபுரிந்து வந்தார்.

கிராமப்புற பகுதி என்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் பலர் தங்களது செல்போன் எண், இ-மெயில் முகவரியை வங்கி கணக்குடன் இணைக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் பலரது வங்கி கணக்கில் இருந்து பணம் குறைந்து இருந்தது. இதனை அறிந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி அவர்கள் காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தியபோது வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து அவர்களுக்கே தெரியாமல் ரூ. 7 லட்சம் வரை கேஷியர் மோகன் மோசடி செய்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

வங்கி கணக்குடன் செல்போன் எண், இ-மெயில் முகவரியை இணைக்காத வாடிக்கையாளர்களை குறி வைத்து அவர் சிறிது, சிறிதாக பணத்தை சுருட்டி இருக்கிறார்.

இதையடுத்து கேஷியர் மோகனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News