செய்திகள்

செந்துறை அரசு மருத்துவமனையில் உடனடியாக போதிய டாக்டர்களை நியமக்க கோரி நோயாளிகள் தர்ணா போராட்டம்

Published On 2018-10-27 17:08 GMT   |   Update On 2018-10-27 17:08 GMT
செந்துறை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததை கண்டித்து நோயாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறையில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. 2010-ம் ஆண்டு 150 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஆனால் 24 மணி நேர மருத்துவமனைக்கு போதிய டாக்டர்களும் ஊழியர்களும் நியமிக்கப்படவில்லை. 

இதனால் இந்த மருத்துவமனை 24 மணி  நேரமும்செயல் படாமல் அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் போன்று செயல்பட்டுவருகிறது.  அரசு போதிய டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் நியமிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். 

ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை எனகூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தாலுக்கா முழுவதும் உள்ள கிராமங்களில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் மருத்துவமனைக்கு வருகின்றனர். தற்போது மருத்துவ மனையில் ஒரு டாக்டர் மட்டும் பணியில் உள்ளார். 

இந்த நிலையில் நேற்று காலை ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக செந்துறை அரசு மருத் துவமனைக்கு வந்தனர். ஆனால் அங்கு டாக்டர் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகள் மருத்துவமனைவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் உடனடியாக போதிய டாக்டர்களை நியமித்து 24 மணிநேரம் மருத்துவமனை இயங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். நோயாளிகளின் இந்த திடீர் போராட்டத்தால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News