செய்திகள்

18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு தாமதமாக வழங்கப்பட்டு உள்ளது- பொன். ராதாகிருஷ்ணன்

Published On 2018-10-25 09:24 GMT   |   Update On 2018-10-25 09:24 GMT
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு காலதாமதமாக வழங்கப்பட்டு உள்ளது மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan #18MLAsCaseVerdict
குழித்துறை:

மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மார்த்தாண்டத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் அதை கோர்ட்டு உறுதி செய்திருக்கிறது. இந்த தீர்ப்பு காலதாமதமான தீர்ப்பு. இதற்கு முன்பே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கி இருக்க வேண்டும். இந்த தீர்ப்பில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

18 எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் முகாமிட்டு புஷ்கரவிழாவில் புனித நீராடி உள்ளனர். இதன்மூலம் இவர்கள் தங்கள் பாவங்களை தண்ணீரில் கழுவிவிட்டுள்ளனர்.


சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்பதை எதிர்த்து பெரும்பான்மையோர் போராடி வருகிறார்கள். கேரளாவில் ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்றுபட்டு இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

ஒரு சிலர் அதுவும் அய்யப்பன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் சபரிமலைக்கு செல்ல முயற்சி செய்தனர். அவர்களுக்கு போலீஸ் சீருடை வழங்கப்பட்டு உள்ளது. யார் திட்டப்படி அவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது என்பது பற்றி விசாரிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #PonRadhakrishanan #18MLAsCaseVerdict
Tags:    

Similar News