முதல் டி20 போட்டி: இலங்கையை எளிதில் வீழ்த்தியது பாகிஸ்தான்
- டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இலங்கை அணி 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தம்புல்லா:
பாகிஸ்தான் அணி இலங்கையில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
தம்புல்லாவில் நடந்த முதல் டி20 போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 19.2 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜெனித் லியாங்கே 40 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் சார்பில் சல்மான் மிர்சா, அப்ரார் அகமது தலா 3 விக்கெட்டும், வாசிம் ஜூனியர், ஷதாப் கான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 16.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சாகிப்சதா பர்ஹான் அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். ஆட்ட நாயகன் விருது ஷதாப் கானுக்கு அளிக்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.