null
13 வருடத்திற்குப் பிறகு பாகிஸ்தான்- வங்கதேசம் இடையே நேரடி விமான சேவை
- கடந்த 2012-ம் ஆண்டு டாக்கா- கராச்சி இடையே விமான சேவை நிறுத்தப்பட்டது.
- இந்திய வான்வழியை வங்கதேசம் பயன்படுத்தும் எனத் தெரிகிறது.
வங்கதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு வங்கதேச அரசு நேரடி விமான சேவையை தொடங்க இருக்கிறது. கடந்த 2012-ம் ஆண்டு இரு நகரங்களுக்கு இடையே நேரடி விமான சேவை இருந்தது. பின்னர் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் சேவை தொடங்க இருக்கிறது. வருகிற 29-ந்தேதியில் இருந்து விமான சேவை தொடங்க இருக்கிறது.
முன்னதாக துபாய் அல்லது தோஹாக வழியாக விமானங்கள் இயக்கப்பட்டது. டாக்கா- கராச்சி இடையில் 2370 கி.மீ, தூரம் ஆகும். இந்திய வான்வழியாக விமான சேவை இயக்கப்படும் எனத் தெரிகிறது. ஆனால், வங்கதேச அரசு இயக்கும் பிமானம் வங்கதேசம் ஏர்லைன்ஸ் இந்தியாவிடம் இன்னும் அனுமதி வாங்கவில்லை.
வாரத்திற்கு இரண்டு முறை விமானம் இயக்கப்பட இருக்கிறது. ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்டதில் இருந்து வங்கதேசம், பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறது. டிப்ளோமேட்டிக், வர்த்தகம், மக்களுக்கு இடையிலான தொடர்பை கட்டமைப்பு பேச்சுவாத்த்தை நடைபெற்று வருகிறது.
தற்போது துபாய் அல்லது தோஹாக வழியாக செல்ல 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் ஆகும். சில விமான நிறுவன விமானங்கள் 18 மணி முதல் 22 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும். தற்போது நேரடி சேவை மூலம் இந்த நேரம் மிகவும் குறையும்.