செய்திகள்

திருவள்ளூரில் மேலும் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல்

Published On 2018-10-24 09:28 GMT   |   Update On 2018-10-24 09:28 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் மேலும் 3 பேருக்கு இதன் பாதித்து ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்த வண்ணம் உள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் மாதிரி சோதனை நடத்தப்பட்டதில் நேற்று 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது.

திருத்தணி விநாயகபுரத்தை சேர்ந்தவர் முனி கிருஷ்ணன் (23), பெரியபாளையம் முகர்ப்பக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் (30). ஊத்துக்கோட்டை லட்சவாக்கம் கிரமத்தை சேர்ந்த சுகந்தி (13) ஆகியோர் 3 கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்து பார்த்த போது, டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. மேலும் 11பேருக்கு டெங்கு நோய்க்கான அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையின் மருத்துவக் குழு தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை செய்து வருகின்றனர். மேலும் மருத்துவமனைக்கு தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு அவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. #DenguFever
Tags:    

Similar News