செய்திகள்

படூர் தொழிற்சாலையில் 68 செல்போன்கள் திருடிய காவலாளி-3 கூட்டாளிகள் கைது

Published On 2018-10-21 08:59 GMT   |   Update On 2018-10-21 08:59 GMT
படூர் தொழிற்சாலையில் 68 செல்போன்கள் திருடிய காவலாளி மற்றும் 3 கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர்:

வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி 4 பேர் கும்பல் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து உதவி கமி‌ஷனர் அழகேசன் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் 4 பேரும் தப்பி ஓடினர்.

உடனே 4 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது ஏராளமான செல் போன்கள் இருந்தது.

விசாரணையில் அவர்கள் வியாசர்பாடியை சேர்ந்த சதீஷ்குமார், தாஸ், காதர் உசேன், பீர்முகமது என்பதும், இதில் சதீஷ்குமார் வெள்ளவேடு அடுத்த படூரில் உள்ள செல்போன் தயாரிப்பு தொழிற்சாலையில் காவலாளியாக வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது.

சதீஷ்குமார் செல்போன்களை தொழிற் சாலையில் இருந்து திருடி வந்து விற்க முயற்சி செய்த போது போலீசில் சிக்கினார். இதையடுத்து வெள்ளவேடு போலீசுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் 4 பேரும் ஒப்படைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News